வீட்டு விலங்கு பற்றிய கட்டுரை
வீட்டு விலங்குள் பற்றிய கட்டுரை
வீட்டில் செல்லப்பிராணிகள் வளர்ப்பது என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று. செல்லப்பிராணிகள் வளர்ப்பதினால் கஷ்டம் வந்தாலும் பிராணிகளுடன் நேரம் செலவிட்டால் மனது மிகவும் சந்தோசமாக இருக்கும். செல்லப்பிராணிகள் வளர்ப்பதால் குழந்தைகள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். அவை நமக்கு பல நன்மைகளை தருகிறது. நாம் வீட்டில் வளர்க்கும் வீட்டு விலங்குகள் நமக்கு ஆரோக்கியமான மனநிலையையும் வாழ்வாதாரத்திற்கும் உதவுகிறது. அத்தகைய சிறப்பு மிக்க வீட்டு விலங்குளை பற்றிய கட்டுரை ஒன்றே இந்த பதிவின் மூலம் பார்க்கலாம் வாருங்கள்.
Essay on domestic animals in tamil | வீட்டு விலங்குகள் பற்றிய கட்டுரை:
மனிதர்களுடன் நீண்ட காலமாக ஒன்றாக வாழ்ந்து வரும் விலங்குகள் வீட்டு விலங்குகள் எனப்படுகின்றன. இவை மனிதர்களுக்கு பல்வேறு வகையான பயன்களை அளிக்கின்றன. வீட்டு விலங்குகள் மனிதர்களுக்கு வாழ்வாதாரத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது. இந்த கட்டுரை மூலம் வீட்டு விலங்குகளின் நன்மைகள் சிறப்புகளை பற்றி பார்க்கலாம்.
வீட்டு விலங்குகளின் வகைகள்:
வேலைகளுக்கு பயன்படும் விலங்கு, பாதுகாப்புக்கு பயன்படும் விலங்கு, உணவு தேவையை பூர்த்திசெய்யும் விலங்கு, மற்றும் மகிழ்ச்சியை வழங்கும் விலங்குகள் என 4 வகையான வீட்டு விலங்குகள் உள்ளன.
வேலைக்கு பயன்படுத்தும் விலங்கு:
மாடு, எருமை போன்ற விலங்குகள் விவசாயத்தில் உதவுகின்றன. குதிரைகள், ஒட்டகம் போன்ற விலங்குகள் சுமையைச் சுமந்து செல்லப் பயன்படுகின்றன.
பசு, எருமை, ஆடு போன்றவை நம் வீடுகளில் அதிகம் வளர்க்கப்படும் விலங்குகள்.
காளை மாடுகள் நமது நிலத்தை உழுவது விவசாயம் செய்வதற்கு பயன்படுகிறது. இப்போது அதிக அளவில் காளை மாடுகள் பயன்படுத்தவில்லை என்றாலும் அவற்றின் கழிவுகள் விவசாய நிலத்தில் உரமாக இன்றளவும் விவசாயத்தில் பயன்படுத்த படுகிறது. எனவே இவை விவசாயத்தின் நண்பன் என்று அழைக்கப்படுகிறது.
பசு தெய்வத்தின் உருவமாக பார்க்கப்படுகிறது. பசு நமக்கு தேவையான உணவு பொருட்களை தருகிறது.
உணவு வழங்கும் வீட்டு விலங்குகள்:
ஆடுகள் நமக்கு இறைச்சியை வழங்குகிறது. செம்மறி ஆடுகள் அவற்றில் இருந்து கம்பளி கிடைக்கிறது.
மாடு, ஆடு, கோழி போன்ற விலங்குகள் நமக்கு பால், இறைச்சி, முட்டை போன்ற உணவுப் பொருட்களை வழங்குகின்றன.
பாதுகாப்பு வழங்கும் வீட்டு விலங்குகள்:
நாய் போன்ற விலங்குகள் வீட்டைக் காவல் காக்கின்றது. பயிற்சி செய்யப்பட்ட செல்லப்பிராணிகள் மனிதர்களுக்கு துணையாகவும் பாதுகாப்பாகவும் வழிநடத்துகிறது.
செல்லப் பிராணிகள்:
பூனை, நாய் போன்ற விலங்குகள் மனிதர்களுக்குத் துணையாக இருக்கின்றன. இவை மனிதர்களின் மன அழுத்தத்தைப் போக்க உதவுகின்றது.
வீட்டு விலங்குகள் நமக்கு துணையாக என்றும் இருக்கக்கூடியது. அதனை நல்ல முறையில் பராமரிப்பது நமது கடமையாகும். அவற்றுக்கு தேவையான உணவு, தண்ணீர் மற்றும் இருப்பிடத்தை அவற்றுக்கு நாம் வழங்க வேண்டும்.
உங்களுக்கு இது போன்ற முக்கிய தகவல்கள், அழகு குறிப்புகள், ஆன்மீக தகவல்கள்,சமையல் குறிப்புகள் போன்றவைற்றை தெரிந்துகொள்ள பொதுநலம் வலைத்தளத்தை பின்தொடருங்கள்.
கூட்டுறவு பற்றிய கட்டுரை.!
எங்கள் ஊர் கட்டுரை | Engal Oor Katturai in Tamil
அம்மா பற்றிய கட்டுரை | Amma Katturai in Tamil
குழந்தைகள் தின பேச்சு போட்டி எளிய 10 வரிகள்..!
திருக்குறள் கட்டுரை | Thirukkural Katturai in Tamil
புயலிலே ஒரு தோணி கட்டுரை | Puyalile Oru Thoni Katturai in Tamil
- சிறுவர் கதைகள்
- பொன் மொழிகள்
- திருக்குறளின் சிறப்பு
- தினம் ஒரு திருக்குறள்
- இயற்கை அனர்த்தம்
- உருவங்கள் வரையும் முறைகள்
- பொதுவான சிந்தனைகள்
- சிறுவர் ஆக்கம்
- விளையாட்டுக்கள்
- விடியோக்கள்
- பிரயாணங்கள்/சுற்றுலா
- அழகான புகைப்படங்கள்
- சிறுவர் சமையல்
- மூலிகைகளை சேகரிப்போம்
- அரச வேலை வாய்ப்புக்கள்
- தொழில்நுட்பம்
- சிறுவர் தொலைக்காட்சி
- கருத்துக்கள்
- சிறுவர் செய்திகள்
- உலக காலநிலை
- Tamil Short Essay Elephants சிறுவர் கட்டுரை
நமக்கெல்லாம் யானை பெரிய விலங்கு என்று அளவில் மட்டுமே தெரியும் . யானையைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகள் பல உள்ளன . அவற்றில் சில வற்றை இங்கு பார்ப்போம் .
யானை 22 மாதங்கள் கருவை சுமக்கும்நான்கு வருடங்களுக்கு ஒரு முறை தான் யானை கருவுறும் பெருபாலான நேரங்களில் யானை ஒரு குட்டிதான் ஈனும் . அரிதாக சில சமயங்களில் இரண்டு குட்டிகள் கூட ஈனும் .
அதன் தும்பிக்கையால் 350 கிலோ வரை எடையை தூக்க முடியும் .
ஒரு யானை ஒரு காட்டையே உருவாக்கும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா .. ஒரு நாளைக்கு 200 – 250 கிலோ உணவு சாப்பிடும் . ஒரு நாளைக்கு 100 – 150 லிட்டர் தண்ணீர் குடிக்கும் .
250 கிலோ உணவில் 10 % விதைகள் இருக்கும் . சாணத்திலிருந்து பத்து கிலோ விதைகள் காட்டில் விதைக்கப்படும் .
யானை ஒரு நாளைக்கு 300 – 500 விதைகள் விதைக்கும் ஒரே நாளில் 100 மரங்களை நடுகிறது . ஒரு வருடத்திற்கு 36500 மரங்கள் நடுகிறது .
ஒரு யானை வாழ்நாளில் 1825000 மரங்கள் வளர காரணமாகிறது . மரங்களை முறிப்பது மாட்டும் யானையின் வேலையில்லை . அதன் சாணத்தின் மூலம் விதைகளை விதைத்து மரங்கள் வளர காரணமாகவும் இருக்கிறது யானை .
இந்த உயிரினம் எத்தனை மரங்கள் , பறவைகள் வாழ்வதற்கு காரணமாக அமைகிறது இயற்கையாக .
தமிழில் யானைக்கு அறுபது பெயர்கள் உள்ளன .யானையின் இரண்டு தந்தைகளும் சம அளவில் இருக்காதுயானையின் துதிக்கை 40000 தசைகளால் ஆனது .
இந்தியாவில் ஒரு லட்சம் யானைகள் இருக்கவேண்டும் என்று கணக்கிடப்பட்ட நிலையில் இப்போது இருப்பது 27312 யானை மட்டுமே உள்ளன .
யானைகள் தமக்குள் பேசிக் கொள்ளும் திறன் வாய்ந்தவை நோயற்ற யானைக்கு உணவையும் நீரையும் மற்ற யானைகள் ஊட்டும் . மற்ற யானைகள் தடவிக் கொடுத்து ஆறுதல் படுத்தும் .
யானையின் பற்கள் சுமார் ஐந்து கிலோ எடை கொண்டவை .
ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் தண்ணீர் இருந்தாலும் அதனை வாசனை மூலம் தெரிந்து கொள்ளும் திறன் கொண்டவை . . தனது தும்பிக்கையால் 7 .5 லிட்டர் தண்ணீரை உறிஞ்சி குடிக்கும் திறனுடையது .
இந்தியாவில் உள்ள பெண் யானைகளுக்கு தந்தம் கிடையாது . ஆப்பிரிக்காவில் உள்ள பெண் யானைகளுக்கு தந்தம் உண்டு .பொது வாக பெண் யானைகளுக்கு மதம் பிடிப்பது கிடையாது .
கூட்டத்தில் முதமையடைந்த யானை தான் இறப்பது உறுதி என்று தெரிந்தால் கூட்டத்தில் இருந்து பிரிந்து உண்ணா நோன்பு இருந்து தன் முடிவை தானே தேடிக்கொள்ளும் . ஞானிகள் உண்ணா நோன்பு இருப்பது சமாதி நிலை அடைவது போல .
இயற்கையை சமநிலை படுத்துவதில் யானையின் பங்கு பெரியது . இயற்கையை சமப்படுத்த இறைவனால் அனுப்பப்பட்ட ஒரு அருங்கொடை யானை என்பது தான் உண்மை.
Kidhours – Tamil Short Essay Elephants , Tamil Short Essay Elephants around the world
திருக்குறளின் சிறப்புகள்
தினம் ஒரு திருக்குறள் கற்போம்
சிறுவர்களுக்கான உலக செய்திகள்
சிறுவர் சுகாதாரம்
உலக காலநிலை செய்திகள்
பொது அறிவு செய்திகள்
சிறுவர் கட்டுரை
பொழுதுபோக்கு
சிறுவர் சித்திரம்
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
YouTube Channel ” kidhours
- #tamil-essay
- article in tamil
- best tamil essay for school children
- katturaigal
- Short Article in Tamil
- siru katturaigal
- Tamil Children Essay
- tamil essay elephant
- tamil katturaigal
- Tamil Kids Essay
- tamil short essay
- Tamil Short Essay Elephants
- yanai katturai
- சிறு கட்டுரை
எவ்வாறு சரஸ்வதி பூஜை வீட்டில் வழிபாடு செய்வது? Saraswathy Poojai
உலக மகளீர் தினம் மார்ச் – 8 women’s day in tamil 8th of murch, சிறு கட்டுரை – ”நேர்மை தவறாத சிறுவன் ” tamil short essay honesty, தவளை பற்றிய முக்கிய குறிப்புக்கள் about the frog, இலங்கை சுதந்திரம் பெற்ற வரலாற்றுக் கட்டுரை history of independence day sri lanka, குதிரை பற்றிய சிறுகட்டுரை tamil short essay horse, most popular, உலகின் மிகப்பெரிய பவளப்பாறை கண்டுபிடிப்பு world largest coral, கனடாவில் நிலநடுக்கம் earthquake in canada, டொனால்ட் டிரம்ப் அபார வெற்றி new us president, சூரிய குடும்பத்தின் அதிசய நிகழ்வு miracle of the solar system, ஐரோப்பாவில் வெள்ளத்தினால் பலியானோர் 200 க்கும் மேலாக அதிகரிப்பு europe floods, புயலால் 82 பேர் உயிரிழப்பு cyclone affects 82 dead, editor picks, popular posts, popular category.
- சிறுவர் செய்திகள் 2328
- பொது அறிவு - உளச்சார்பு 611
- தினம் ஒரு திருக்குறள் 556
- உலக காலநிலை 328
- கட்டுரை 162
- பெற்றோர் 83
- புவியியல் 81
Contact us: here
© 2023 Kidhours.com. All Rights Reserved.
- Privacy Policy
- Terms and Conditions
அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!
எமது Facebook இல் இணைந்து
பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.
தமிழ் கட்டுரைகள்
Katturai in tamil.
- [ January 21, 2024 ] தூய்மை இந்தியா பேச்சு போட்டி பேச்சு போட்டி கட்டுரைகள்
- [ January 21, 2024 ] நான்கு எழுத்து சொற்கள் தமிழ்
- [ January 21, 2024 ] மூன்று எழுத்து சொற்கள் தமிழ்
- [ January 21, 2024 ] இரண்டு எழுத்து சொற்கள் தமிழ்
- [ January 21, 2024 ] எட்டுத்தொகை நூல்கள் கட்டுரை தமிழ்
- காடு பற்றிய கட்டுரை
- kaadu patri katturai in tamil
இந்த பதிவில் “ காடு பற்றிய கட்டுரை ” பதிவை காணலாம்.
காடுகள் பாதுகாக்கப்படும் போதுதான் மனித குலமே பாதுகாக்கப்படும் என்ற உண்மையை அனைவரும் உணரவேண்டும்.
குறிப்பு சட்டகம்
காடுகளின் முக்கியத்துவம், மரங்களின் பயன்கள், காடுகளைக் காப்போம்.
காடுகள் இல்லையெனில் மனிதர்கள் இல்லை. காடுகளின் முக்கியத்துவம் பற்றி உணர்ந்ததால் தான் திருவள்ளுவர் “மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடையது அரண்” எனக் கூறியுள்ளார்.
காடுகள் செழிப்பாக இருந்தால் தான் ஒரு நாடு செழிப்பாக இருக்கும். எனினும் இன்று காடுகள் அழிப்பு என்பது உலகம் முழுவதிலும் தொடர்ந்த வண்ணமே உள்ளது.
உலக வனத் துறை சட்டப்படி, ஒரு மரம் வெட்டப்பட்டால், 10 மரக்கன்றுகள் நட வேண்டும் என்பது விதி. ஆனால், அது ஏட்டளவில் தொடர்வதாகவே தெரிகிறது. இக்கட்டுரையில் காடுகள் பற்றி நோக்கலாம்.
மனிதன் உட்பட பல கோடி உயிரினங்களின் அடிப்படை ஆதாரமாக காடுகள் விளங்குகின்றன. காடுகள் இல்லையேல் நாடுகள் இல்லை. வனம் இன்றிப் போனால் மனித இனம் உள்பட அனைத்து உயிரினங்களும் அற்றுப் போகும்.
பல வகையான உயிரினங்கள் வாழ்வதற்கு காடுகள் முக்கியமானவையாகும். வனங்களில் பெய்யும் மழையே அனைத்து உயிரினங்களுக்கும் நீராதாரமாக விளங்குகின்றது.
காடுகளும், மரங்களும் வளமாக இருந்தால் நமக்கான தண்ணீர்த் தேவை குறையாமல் இருக்கும்.
சுவாசிக்க ஆக்சிஜனை கொடுக்கிறது. அதுமட்டுமல்லாமல் பல உயிரினங்கள் வாழுமிடமாகவும் திகழ்கிறது. மனிதன் இல்லாவிட்டாலும் மரங்கள் வாழும் ஆனால், மரங்கள் இல்லாவிட்டால் மனிதன் வாழ முடியாது என்பதே உண்மை.
மரங்கள் நமக்கு நிழலைக் கொடுக்கின்றன. உண்ண உணவு, உடுத்த உடை, இப்படி நாம் பிறந்தது முதல் இறக்கும் வரை அனைத்திற்கும் தேவையானது மரமாகும்.
சுற்றுச்சூழலை பாதுகாக்கின்றது. மழை பெறுவதற்கு மரம் இன்றியமையாததாகும். மரங்கள் காற்றை சுத்தப்படுத்துகின்றது.
நகரமயமாக்கல், வளர்ச்சிப் பணிகள், மனிதப் பேராசை உள்ளிட்ட காரணங்களால் தினமும் ஆயிரக்கணக்கான ஹெக்டேயர் பரப்பளவுக்கு காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன.
நிலக்கரி உள்ளிட்ட கனிம வளங்கள் வெட்டியெடுக்கப்படுதல், சுரங்கப் பணிகள், தொழிற்சாலைகளை நிறுவுதல், விமான நிலையங்களை அமைத்தல், ரயில் இரும்புப் பாதைகள் அமைத்தல், அணைகள் – பாலங்கள் அமைத்தல், சாலை அமைத்தல் மற்றும் விரிவாக்கம் செய்தல்,
கல்வி நிறுவனங்களை அமைத்தல் சுற்றுலா விடுதிகள் – குடியிருப்புகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் காடுகள் வரைமுறையின்றி அழிக்கப்பட்டு வருகின்றன.
காடுகள் நமக்கு எண்ணிலடங்கா நன்மைகளை அளிக்கின்றன. அப்படிப்பட்ட காடுகளை அழிப்பது நம்மை நாமே அழிப்பதற்கு சமம் ஆகின்றது.
காடுகளின் பயனை அறிந்தே நம் அரசு ‘வனத்துறை பாதுகாப்பு’ என்ற ஒரு அமைச்சகத்தையே நியமித்துள்ளது.
ஒரு மரத்தை வெட்டினால் இரு மரங்களை நட வேண்டும். சட்டவிரோதமாக காட்டு மரங்கள் அழிக்கப்படுவதற்கு கடுமையான சட்டங்களை அமல்படுத்த வேண்டும். காடுகள் பாதுகாக்கப்படும் போதுதான் மனித குலமே பாதுகாக்கப்படும் என்ற உண்மையை அனைவரும் உணரவேண்டும்.
இன்று காடுகள் இல்லையென்றால் ஏதும் இல்லை என்ற நிலை வந்துவிட்டது. பெருமளவில் காடுகளை அழிப்பதால் நமது நாட்டின் இயற்கை வளம் அழிந்து வருகிறது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
காடுகளை பாதுகாப்பது நமது தலையாய கடமை என்பதனை உணர்ந்து செயற்பட வேண்டும். எனவே வனங்களைக் காத்து வளமான வாழ்வினை வாழ்வோம்.
- kaadu katturai in tamil
- காடு கட்டுரை
All Copyright © Reserved By Tamil Katturai 2023
IMAGES
VIDEO